ADDED : டிச 10, 2024 10:25 PM
சென்னை:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பொறுப்பு செயலர் கீதா செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தொழில்முறை நடத்தை விதிகளை மீறி செயல்பட்ட வழக்கறிஞர்களுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ஏ.எம்.முகமது உமர் முக்தர், ஐந்து ஆண்டுகளுக்கும்; மதுரையைச் சேர்ந்த ஆர்.சுப்பையா பாண்டியன், இரண்டு ஆண்டுகளுக்கும் 'சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர்.
இதேபோல, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பி.சாம்ராஜ், ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், புகார்தாரருக்கு, 2.50 லட்சம் ரூபாயை மூன்று மாதத்துக்குள் வழங்க வேண்டும்.
இதுதவிர கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பிபின் ஞானகுமார், ஆர்.ஜெயராமன், கிறிஸ்து பிரிகேட்ராஜ், ஜோசப்ராஜ், அட்லின் டேவி, ஜெயசண்முகம், பெஸ்லின் ஜெகதீஷ் ஆகியோர் ஐந்து ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

