ADDED : அக் 04, 2025 06:42 AM

தி.மு.க.,வில், சட்டசபை தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, மாவட்டச் செயலர்களின் செயல்பாடுகளை கேட்டறிந்துள்ளார்.
அதன் அடிப்படையில், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலர் கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டார். கோவை மாநகர மாவட்டச் செயலர் கார்த்திக் மாற்றப்பட்டு, மாவட்ட பொறுப்பாளராக செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலர் ஆவுடையப்பன் வசம் இருந்த சட்டசபை தொகுதிகள் பறிக்கப்பட்டு, மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். கிழக்கு மாவட்டத்திற்கு கிரகாம்பெல் நியமிக்கப்பட்டார்.
மேலும் சில மாவட்டச் செயலர்களை மாற்றவும், மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்டச் செயலர்களை நியமிக்கவும் தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'விருதுநகர் தெற்கு, தென்காசி தெற்கு, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
' சென்னை தெற்கு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொகுதிகளை பிரித்து, புதிய மாவட்டங்களை உருவாக்கி, 10 மாவட்டச் செயலர்கள் கூடுதலாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.
- நமது நிருபர் -