சிறுமியை அடைத்து பலாத்காரம் ரவுடிக்கு 10 ஆண்டு தண்டனை
சிறுமியை அடைத்து பலாத்காரம் ரவுடிக்கு 10 ஆண்டு தண்டனை
ADDED : ஜன 13, 2024 01:08 AM
புதுச்சேரி:புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2018ல் திடீரென மாயமானார்; நான்கு நாட்கள் கழித்து வீடு திரும்பினார்.
அவரை விசாரித்ததில், அரியாங்குப்பம் ரவுடி ராஜ், 27, அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நண்பரின் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.
அரியாங்குப்பம் போலீசார், ரவுடி ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி போக்சோ கோர்ட்டில் வழக்கு நடந்தது; நீதிபதி சோபனா தேவி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜுக்கு போக்சோ பிரிவில் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, சிறுமியை கடத்தியதற்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.