sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சபரிமலை துாய்மை பணியில் 1125 தமிழக தன்னார்வலர்கள் : 2026 ஜனவரி வரை சேவை

/

 சபரிமலை துாய்மை பணியில் 1125 தமிழக தன்னார்வலர்கள் : 2026 ஜனவரி வரை சேவை

 சபரிமலை துாய்மை பணியில் 1125 தமிழக தன்னார்வலர்கள் : 2026 ஜனவரி வரை சேவை

 சபரிமலை துாய்மை பணியில் 1125 தமிழக தன்னார்வலர்கள் : 2026 ஜனவரி வரை சேவை


ADDED : நவ 13, 2025 06:17 AM

Google News

ADDED : நவ 13, 2025 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சபரிமலை மண்டல, மகர விளக்கு காலங்களில் சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் துாய்மை பணியில் ஈடுபட தமிழகத்தில் இருந்து அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 1125 தன்னார்வலர்கள் புறப்பட்டு சென்றனர். இவர்கள் மகரஜோதி தரிசனம் முடிந்த பிறகும் ஜனவரி இறுதி வரை அங்கு சேவை செய்கின்றனர்.

சபரிமலையில் மாதந்தோறும் சன்னிதான நடை திறந்தாலும், கார்த்திகை மாதம் துவங்கி தை வரை தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். மண்டல கால பூஜைக்காக நவ.16 மாலையில் நடை திறக்கப்படுகிறது. மதுரையை மையமாக கொண்டு செயல்படும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் பக்தர்கள் வரும் வழியில் தன்னார்வலர்கள் ஆண்டுதோறும் துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டும் 1125 பேர் சென்றுள்ளனர்.

இதுகுறித்து தலைவர் விஸ்வநாதன், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: சபரிமலை சுகாதார சங்கத்தின்கீழ் தன்னார்வலர்கள் வேலை செய்ய உள்ளனர். பந்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்படி சன்னிதானம், பம்பை, நிலக்கல், பந்தளம் பகுதிகளில் 1000 பேர் துாய்மை பணியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபடுகின்றனர். எருமேலியில் 125 பேர் பணிபுரிய உள்ளனர்.

இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து உடற்தகுதி உடைய, போலீஸ் நன்னடத்தை சான்று பெற்ற, 60 வயதிற்குட்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மதுரை, சேலத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் பந்தனம் திட்டா, கோட்டயம் கலெக்டர் அலுவலகங்களுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து ஊக்கத்தொகையாக தினமும் ரூ.450 முதல் ரூ.550 வரை கேரளா அரசு சார்பில் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். உணவு, தங்கும் இடம் போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகங்கள் செய்துள்ளன. மகரஜோதி முடிந்தபிறகும் ஜனவரி இறுதி வரை இவர்கள் துாய்மை பணியில் ஈடுபடுவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பணியை செய்து வருகிறோம். நவ.16க்கு பிறகு சென்னை முதல் குமரி வரை எங்கள் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்குவதோடு, மருத்துவ முகாம்களையும் நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினர். செய்தி தொடர்பாளர் மணி உடனிருந்தார்.






      Dinamalar
      Follow us