ADDED : ஏப் 05, 2025 02:54 AM
திருச்சி:திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை, ரன்வேயில் விமானி கண்டுபிடித்ததால், 113 பயணியர் உயிர் தப்பினர்.
திருச்சியில் இருந்து நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 113 பயணியருடன் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானம் ரன்வேயில் சென்றபோது, இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை தெரிந்து கொண்ட விமானி, விமானத்தை மேலே எழுப்பாமல், மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்தினார்.
உடனடியாக, 113 பயணியரும் இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து, விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் பயணியர் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
10 மணி நேர காத்திருப்புக்கு பின், நேற்று மதியம் 1.20 மணிக்கு புறப்பட்ட துபாய் விமானத்தில், பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

