ADDED : நவ 12, 2025 01:53 AM
சென்னை, தமிழகத்தில் மளிகைக் கடை உட்பட, பல்வேறு வகையான வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள வணிகர்களுக்கு உதவ, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வணிகர் நல வாரியம் செயல்படுகிறது .
இதில் உறுப்பினராக உள்ள வணிகர்களுக்கு, நிதியுதவி உட்பட, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப் படுகின்றன.
வணிகர் நல வாரியத்தில், 88,849 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் முதல், இம்மாதம் வரை, வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர, 500 ரூபாய் கட்டணம் செலுத்துவதில் இருந்து, அரசு விலக்கு அளித்தது.
ஜி.எஸ்.டி., சட்டத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத வணிகர்களில், ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்வோர், வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்.
இன்னும், 18 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், இதுவரை 12,000 பேர் புதிதாக உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.

