ADDED : அக் 16, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: போலி விளம்பரம் செய்து, பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த, 1,277 சமூக வலைதள கணக்குகளை போலீசார் முடக்கினர்.
சைபர் குற்றவாளிகள், பண மோசடிக்கு, 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, தள்ளுபடி மற்றும் குறைந்த விலைக்கு, பட்டாசு விற்பதாக போலி விளம்பரம் செய்து, சிலர் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக அதிகாரிகள் மற்றும் போலீசார், நவீன தொழில் நுட்பம் வாயிலாக கண்காணித்து, இந்த ஆண்டில் இதுவரை, பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டு வந்த சமூக வலைதளங்களில், 1,277 கணக்குகளை முடக்கி உள்ளனர்.