தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தலைமறைவாக இருந்த 14,775 பேருக்கு மீண்டும் சிறை

தலைமறைவாக இருந்த 14,775 பேருக்கு மீண்டும் சிறை

தலைமறைவாக இருந்த 14,775 பேருக்கு மீண்டும் சிறை


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: குற்றங்களில் ஈடுபடுவோரை, போலீசார் கைது செய்து, சிறைகளில் அடைக்கின்றனர். அவர்கள் ஜாமினில் வெளிவந்த பின், தலைமறைவாகி விடுகின்றனர். பழிக்கு பழி, திருட்டு, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற நபர்கள், போலீசாரிடம் எளிதில் சிக்குவதும் இல்லை.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல், ஆண்டு கணக்கில் ‘டிமிக்கி’ கொடுப்பதால், நீதிமன்றங்கள் பிடியாணைகளை பிறப்பித்து வருகின்றன. அந்த உத்தரவை நிறைவேற்றாவிட்டால், போலீஸ் அதிகாரிகள், நீதிமன்றங்களின் கண்டனத்திற்கும் ஆளாக நேரிடும்.

இதனால், மாநிலம் முழுதும் குற்ற வழக்குகளில் கைதாகி, ஜாமினில் வெளி வந்தவர்களில் எத்தனை பேர் மீது, பிடியாணை உள்ளது என்பது குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், நடப்பு ஆண்டில் தலைமறைவாக இருந்த, 14,775 பேரை போலீசார் மீண்டும் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ரவுடிகள், 16,196 பேரும், தொடர் குற்றங்களில் ஈடுபட்ட, 2,189 பேரும் கைதாகி இருப்பதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us