ADDED : ஏப் 25, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகம் முழுதும் உள்ள குடும்பநல நீதிமன்றங்களுக்கு, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
'கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குடும்பநல நீதிமன்றங்களுக்கு, விடுமுறை அளிக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், கடந்த 7ம் தேதி, உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், மே 1 முதல், 15ம் தேதி வரை, 15 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.
இதற்கான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி பிறப்பித்து உள்ளார்.
விடுமுறை நாட்களில், குடும்பநல நீதிமன்ற அலுவலகங்கள், வழக்கம் போல இயங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

