சார் பதிவாளர்கள் 17 பேர் மாற்றம்: பதிவுத்துறை உத்தரவு
சார் பதிவாளர்கள் 17 பேர் மாற்றம்: பதிவுத்துறை உத்தரவு
ADDED : ஜன 02, 2025 02:57 AM
சென்னை:பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், சார் பதிவாளர்களுக்கு, பொது மாறுதல் வழங்குவது, சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனால், சார் பதிவாளர்கள் சொந்த காரணங்களுக்காக, விரும்பிய ஊர்களுக்கு, இடமாறுதல் பெற முடியாத நிலை இருந்தது.
தற்போது அரசின் அனுமதியுடன், சொந்த காரணங்கள் அடிப்படையில், இடமாறுதல் வழங்கும் பணிகள் துவங்கி உள்ளன.
இதன்படி ஏற்கனவே, 19 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது, 17 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, கோவை, திருவாரூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தர்மபுரி, காஞ்சிபுரம், தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார்.