sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அலையில் சிக்கிய 3 பேரில் 2 பேர் மாயம் ஒருவர் மீட்பு

/

அலையில் சிக்கிய 3 பேரில் 2 பேர் மாயம் ஒருவர் மீட்பு

அலையில் சிக்கிய 3 பேரில் 2 பேர் மாயம் ஒருவர் மீட்பு

அலையில் சிக்கிய 3 பேரில் 2 பேர் மாயம் ஒருவர் மீட்பு


ADDED : ஜன 01, 2024 04:34 AM

Google News

ADDED : ஜன 01, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த சிவகுமார் மகன் பிரகாஷ், 20; கார் ஓட்டுனர். இவர் நேற்று முன்தினம், நண்பர்கள் மூவருடன், அக்கரை கடலில் குளித்துள்ளார். அப்போது பிரகாஷ், அலையில் சிக்கி, கடலில் மாயமானார்.

பெருங்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சக்திவேல், 24; காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்று, கடை ஊழியர்களுடன், பாலவாக்கம் கடலில் குளித்தார்.

அப்போது, சக்திவேல் அலையில் சிக்கி கடலில் மாயமானார். நீலாங்கரை போலீசார், மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் உதவியுடன், இருவரையும் தேடுகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 26; ஓ.எம்.ஆரில் தங்கி, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று, நண்பர்களுடன் நீலாங்கரை கடலில் குளித்தார்.

அப்போது, அலையில் சிக்கி உயிருக்கு போராடினார். மீனவர்கள் உதவியுடன், நீலாங்கரை போலீசார், சீனிவாசனை மீட்டனர். இதனால், சீனிவாசன் தப்பினார்.






      Dinamalar
      Follow us