உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 11:26 PM
அ நிறம் | அளவு
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில், அயல் பணியில், நிரந்தர பணியாளர்கள் பணிபுரிகின்றனர். நிறுவனம் சார்பில் நடத்தப்படும் மது கடைகளில், மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவியாளர் என, 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர், தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, அனைவருக்கும் 20 சதவீதம் போனஸ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதன்படி பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும், 16,800 ரூபாய் போனஸ் கிடைக்கும்.
