ADDED : அக் 11, 2024 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தி வசூலிக்கக் கூடாது என, சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிகமாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைத்து, தமிழகம் முழுதும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, தமிழக அரசுக்கு வரி செலுத்தாமல், பிற மாநிலங்களைச் சேர்ந்த, 20 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பஸ்களை பறிமுதல் செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.