தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/2,000 ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு இயக்கம்

2,000 ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு இயக்கம்

2,000 ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு இயக்கம்


UPDATED : நவ 06, 2026 07:15 PM

ADDED : நவ 05, 2026 07:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:15 PM ADDED : நவ 05, 2026 07:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தீபாவளி பண்டிகை ஒட்டி, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து, 2,000 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதுகுறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் கூறியதாவது:

தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஆம்னி பஸ்களில் பயணிக்க, பொது மக்கள் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர். 50,000க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை நகரங்களுக்கும், புதுச்சேரியில் இருந்து கோவை, மதுரை, பெங்களூருக்கும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து வழக்கமாக, 1,200 ஆம்னி பஸ்கள் இயக்குவோம். இந்த தீபாவளியை ஒட்டி, 2,000 பஸ்களாக அதிகரித்து இயக்க முடிவு செய்துள்ளோம்.

பண்டிகை முடிந்த பின்னும், பயணியர் தேவைக்கு ஏற்ப, பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்கள் இயக்குவோம். டீசல் விலை, உதிரிபாகங்களின் விலை உயர்ந்துள்ளதால், ஆம்னி பஸ்கள் தொழில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, நியாயமான கட்டணத்தை வசூலிக்க முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us