வாக்காளர் பட்டியலில் திருத்தம் 23 லட்சம் பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் 23 லட்சம் பேர் விண்ணப்பம்
ADDED : டிச 25, 2024 01:09 AM

சென்னை:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும், 23 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
தமிழகத்தில், அக்டோபர் 29ம் தேதி நிலவரப்படி, 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை, தகுதி ஏற்படுத்தும் நாளாக வைத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள், கடந்த நவம்பர் 28ம் தேதி வரை நடந்தன.
பட்டியலில் பெயரை நீக்க, 2.69 லட்சம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கு, 1.60 லட்சம் விண்ணப்பங்கள், ஆன்லைன் வாயிலாக வந்துள்ளன.
புதிதாக பெயர் சேர்க்க, 9.22 லட்சம் பேரும், வெளிநாட்டில் உள்ளோர் 18 பேரும், பெயர் நீக்க, 2.81 லட்சம்; திருத்தம், முகவரி மாற்றம் செய்ய, 5.66 லட்சம் விண்ணப்பங்களும், நேரடியாக பெறப்பட்டு உள்ளன.
வரும் ஜன., மாதம் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

