தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வெளி மாநிலத்திற்கு கடத்திய 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

வெளி மாநிலத்திற்கு கடத்திய 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

வெளி மாநிலத்திற்கு கடத்திய 250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : நவ 14, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே, வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்ற, 250 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள சரஸ்வதி நகர் கூட்டுச்சாலை பகுதியில், நேற்று (நவ.,13) நள்ளிரவு அம்பலுார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக மொபட்டில் வந்த ஒருவர், போலீசாரை கண்டதும் சற்று துாரத்தில் மொபட்டை நிறுத்தி தப்பி சென்றார்.

இதை பார்த்த போலீசார், மொபட்டை சோதனை செய்தபோது, 250 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் மற்றும், 250 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், திம்மாம்பேட்டை அடுத்த திக்குவாவாளையத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி, 40, என்பவர் கூலிக்கு ஆட்களை அமர்த்தி, அவர்கள் வாயிலாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்வது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள ராஜீவ்காந்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us