தமிழகத்திற்கு 260 மெகாவாட் மத்திய மின்சாரம் ஒதுக்கீடு
தமிழகத்திற்கு 260 மெகாவாட் மத்திய மின்சாரம் ஒதுக்கீடு
ADDED : மார் 18, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கியதால், தினசரி மின்தேவை, 16,000 மெகாவாட்டில் இருந்து, 18,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இது, ஏப்ரல், மே மாதங்களில், 22,000 மெகாவாட்டை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மின்தேவையை சிரமமின்றி பூர்த்தி செய்ய, மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் வழங்குமாறு, மத்திய மின்துறையிடம், மின் வாரியம் சமீபத்தில் வலியுறுத்தியது.
இதையடுத்து, கர்நாடகா மாநிலத்தில் உள்ள தேசிய அனல்மின் கழகமான, என்.டி.பி.சி., குட்கி அனல் மின் நிலையத்தில் இருந்து, தமிழகத்திற்கு இம்மாதம், 14 முதல் மே 31 வரை, 260 மெகா வாட் மின்சாரத்தை ஒதுக்கீடு செய்து, மத்திய மின்துறை உத்தரவிட்டுள்ளது.