உண்ணாவிரத போராட்டத்தில் அரசு ஊழியர் 3 பேர் மயக்கம்
உண்ணாவிரத போராட்டத்தில் அரசு ஊழியர் 3 பேர் மயக்கம்
ADDED : ஜூலை 26, 2025 01:05 AM

சென்னை:பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் , 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில், மூன்று ஊழியர்கள் மயங்கிய நிலையில், அவர்களில் ஒருவர் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போராட்டம் குறித்து, இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் எங்கெல்ஸ் கூறியதாவது:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தக்கோரி, மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறோம்.
அரசு தரப்பில் அதிகாரிகளும், அமைச்சரும் பேச்சுக்கு கூட அழைக்காதது, தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது அக்கறை இல்லாததையே காட்டுகிறது.
தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றியதாக, தி.மு.க.,வினர் வீண் விளம்பரம் செய்து வருகின்றனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர்கள் அளித்த வாக்குறுதியில் பெரும்பான்மையை முதல்வர் மறந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.