UPDATED : அக் 22, 2026 01:31 AM
ADDED : அக் 22, 2026 01:27 AM
தாராபுரம்: தாராபுரத்தில், தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது, நா.த.க., சார்பில் கார்த்திகா என்பவர் போட்டியிட்டார். அப்போது, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக, போலீசாரிடம் அக்கட்சியினர் வாக்குவாதம் செய்தனர். பேனர் அகற்றப்பட்டதை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தவிர, முதல்வர் விஜய் பிரசார வாகனம் செல்லும் பாதையில், அனுமதியின்றி பிரசாரம் செய்தது, மறியலில் ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, வேட்பாளர் கார்த்திகா உட்பட ஒன்பது பேரை நேற்று முன்தினம் கைது செய்து, கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த மோகன் பிரசாத், 32, புதுச்சேரி காரைக்காலைச் சேர்ந்த வெங்கடேசன், 53, சென்னை எழும்பூரைச் சேர்ந்த கோகுல், 29, ஆகியோரை தாராபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
