ADDED : பிப் 08, 2024 09:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:சிவகாசியிலிருந்து தேனிக்கு 2013 ஜூலை 2ல் ஒரு அரசு பஸ் சென்றது. இரவு 9:00 மணிக்கு உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் வந்தபோது ராதாகிருஷ்ணன், 34, என்பவர் மறித்தார்.
'ஹாரன்' ஒலி எழுப்பாமல் வந்ததாகக்கூறி செங்கலை வீசினார். பஸ் கண்ணாடி உடைந்தது. டிரைவர் ராமசாமிக்கு கையில் காயம் ஏற்பட்டது. உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த போலீசார், மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், ராதாகிருஷ்ணனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சிவகடாட்சம் தீர்ப்பளித்தார்.

