தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/30 எம்.எல்.ஏ.,க்களுக்கு இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி

30 எம்.எல்.ஏ.,க்களுக்கு இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி

30 எம்.எல்.ஏ.,க்களுக்கு இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி


ADDED : அக் 28, 2026 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2026 02:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், 30 எம்.எல்.ஏ.,க்களுக்கு, இரு நாள் புத்தாக்க மற்றும் தலைமைத்துவ பயிற்சி முகாம், நேற்று தொடங்கியது.

தமிழகம் மற்றும் மேகாலயா சட்டசபை செயலகம் இணைந்து, 17வது சட்டசபைக்கு தேர்வானவர்களில், 30 எம்.எல்.ஏ.,க்களுக்கு, இரண்டு நாட்கள் நடத்தும் பயிற்சி முகாம், மாமல்லபுரம் ஐடியல் பீச் ரிசார்ட்டில், நேற்று தொடங்கியது.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக சட்டசபை செயலர் சாந்தி உள்ளிட்டோர், பயிற்சியை தொடக்கி வைத்தனர்.

சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேசுகையில், ‘‘எம்.எல்.ஏ.,க்கள், மக்கள் பிரச்னையை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். சட்டசபையில், தன் கருத்துக்களை எளிய முறையில் எடுத்துரைத்து, மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதும் அவசியம்,’’ என்றார்.

‘துறை வாரியாக வெள்ளை அறிக்கை’


த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி:
தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையில், எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. முன்னாள் அமைச்சர்கள் பலர், தொடர்ச்சியாக பல்வேறு ஊழல்களை செய்துள்ளனர்.
ஆதாரங்கள் அடிப்படையிலேயே, தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை யில் ‘பேட்ச் ஒர்க்’ பணிகளுக்கு மட்டுமே, 2,000 கோடி ரூபாய்க்கு ‘டெண்டர்’ போடப்பட்டு, பலருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்கு முந்தைய மாதங்களில், அவசர அவசரமாக, பல்வேறு டெண்டர்கள் போடப்பட்டு உள்ளன. டெண்டர் முறைகேடுகள் குறித்து, ஆய்வு செய்து வருகிறோம்.
விரைவில் நெடுஞ்சாலைத் துறையில், வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். நெடுஞ்சாலைத்துறை மட்டுமல்ல. பல துறைகளிலும், அமைச்சர்கள் பல்வேறு வழிகளில், முறைகேடுகள் செய்துள்ளனர். விரைவில் ஒவ்வொரு துறையாக, ஊழல் குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, துறை வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us