தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மேலும் இரண்டு வழக்கில் ‘கிரானைட்’ வீரமணி கைது

மேலும் இரண்டு வழக்கில் ‘கிரானைட்’ வீரமணி கைது

மேலும் இரண்டு வழக்கில் ‘கிரானைட்’ வீரமணி கைது


UPDATED : அக் 28, 2026 12:00 AM

ADDED : அக் 27, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 12:00 AM ADDED : அக் 27, 2026 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஐந்து மற்றும் ஆறாவது ‘போக்சோ’ வழக்கில், நேற்று கைது செய்யப்பட்ட, கிரானைட் வீரமணியை, நவ., 10ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க, சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

சிறுமியரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் அடிப்படையில், கிரானைட் வீரமணி உட்பட எட்டு பேரை, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட 12 சிறுமியர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வீரமணி மீது எட்டு ‘போக்சோ’ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில், நான்கு வழக்குகளில் வீரமணி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், ஐந்து மற்றும் ஆறாவது ‘போக்சோ’ வழக்கில், நேற்று மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இவ்விரண்டு வழக்கையும் விசாரித்த, ‘போக்சோ’ நீதிமன்ற நீதிபதி எஸ். பத்மா, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us