UPDATED : அக் 28, 2026 12:00 AM
ADDED : அக் 27, 2026 10:36 PM
ம.ராஜராஜன், தஞ்சாவூர்:
‘பதவி உயர்வு, இட மாறுதலுக்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என, தமிழக அரசு எச்சரித்துள்ளதே?
அப்படியே அவர்கள் தங்கள் பணியை சரிவர செய்ய வேணடும்; பொதுமக்களை அலைக்கழிக்கக்க கூடாது என்றும் எச்சரிக்கலாம்.
ரா.ராஜேந்திரன், அரியலுார்:
காங்., ராகுல், பிரியங்கா இடையே மோதல் என, பா.ஜ., பேசுவது குறித்து?
உடனே இருவரும் சிரித்தபடி கைகோர்த்து, கரப்பான் பூச்சிகளுடன் சேர்ந்து ஒரு போராட்டத்தில் இறங்கி விடுவரே!
ஆர்.நளினி, கோவை:
ஊட்டியில் ஏற்பட்ட நிலச்சரிவு எதை எடுத்துக்காட்டுகிறது?
நாம் இயற்கையை அதன்போக்கில் விடாமல், ஆக்கிரமிப்புகளையும், குப்பைக்கூளங்களின் காடாகவும் மாற்றினால், இயற்கை சீற்றம் பெற்று, இப்படி கொந்தளிக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
கி.பாலமுருகன், ராமநாதபுரம்:
இன்ஜினியரிங் படிக்காத உத்தரகண்ட் மாணவர் ரவிதம்பா, பறக்கும் காரை உருவாக்கி இருக்கிறாரே?
ஏட்டு சுரைக்காய் மட்டும் போதாது; சுயபுத்தியும், விடாமுயற்சியும், கற்பனை திறனும், அதை செயல்படுத்தும் சாமர்த்தியமும் மாணவர்களுக்கு அவசியம் என்பதை நிரூபித்துள்ளார் ரவி தம்பா.
கே.தேன்ராஜா, நெய்வேலி:
‘ரசிகர்களின் சக்திக்கு ஒரு அர்த்தத்தை உருவாக்க வேண்டும்’ என்று, நடிகர் தனுஷ் கூறுகிறாரே?
அது சரி... தன், மகளிரணி முதல் மாநாட்டிற்கே நான்கு மணி நேரம் தாமதமாக வந்துள்ளார். மழையில் நனைந்த நிர்வாகிகளுக்கு சரியான ஏற்பாடுகளும் செய்யவில்லை. அங்கு வந்த ஆண் ரசிகர்களை, தனுஷின் நிர்வாகிகள் விரட்டி அடித்துள்ளனர். இவர் எப்படி ஒரு இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்த போகிறார் என்ற கேள்வி எழுகிறதே!
மு.நாகூர், ராமநாதபுரம்:
‘சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தயாரிப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது’ என்று, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பாராட்டு தெரிவித்துள்ளாரே?
தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனும் பெருமைப்பட வேண்டிய தகவல். அரசியல்வாதிகள், ‘கட்டிங்’ வாங்குவதை விட்டு நம் தொழிற்சாலைகளை வளர்த்தால், தமிழகம் மேலும் பல சாதனைகளை படைக்கும் என்பதை இது உணர்த்துகிறது.
மு.செல்வி, வேலுார்:
‘வீ த லீடர்ஸ்’ அண்ணாமலை, உள்ளாட்சி தேர்தலில் தன் கட்சி, எட்டு லட்சம் பதவிகளையும் கைப்பற்ற வேண்டும் எனக்கூறி இருக்கிறாரே?
அண்ணாமலை யதார்த்தவாதி ஆயிற்றே. அவரும் இப்படி மனக்கோட்டை கட்ட ஆரம்பித்து விட்டாரே!
