ADDED : ஜன 04, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கொரோனா தொற்றால் 34 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் நேற்று ஒருவர் உயிரிழந்தார்.
தமிழகத்தில் காய்ச்சல், சளி அறிகுறியுடன் இருந்த 649 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், சென்னையில் 18; செங்கல்பட்டில் ஐந்து; காஞ்சிபுரத்தில் நான்கு; கோவையில், இரண்டு; மதுரை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, திருநெல்வேலி மாவட்டங்களில் தலா ஒருவர் என, 34 பேருக்கு தொற்று உறுதியானது.
சிகிச்சை பெற்றவர்களில், 22 பேர் குணமடைந்த நிலையில், 190 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 42 வயது நபர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.