தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மத்திய மண்டலத்தில் 34 பேர் முன்னெச்சரிக்கை கைது

மத்திய மண்டலத்தில் 34 பேர் முன்னெச்சரிக்கை கைது

மத்திய மண்டலத்தில் 34 பேர் முன்னெச்சரிக்கை கைது


UPDATED : நவ 10, 2026 06:27 PM

ADDED : நவ 10, 2026 06:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 06:27 PM ADDED : நவ 10, 2026 06:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: மத்திய மண்டல மாவட்டங்களில், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 34 பேரை கைது செய்து உள்ளனர்.

தீபாவளி பண்டிகையின் போது குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களில் போலீஸ் துறை சார்பில், சிறப்பு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், நீண்ட நாட்களாக பிடிவாரன்ட் பிறப்பித்து, நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யும் வகையிலும், மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை உட்பட ஒன்பது மாவட்டங்களில், 368 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில், 693 வீடுகளில் சோதனை நடத்திய போலீசார் 32 வழக்கு பதிந்து, 34 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, இனோவா கார், மூன்று பைக்குகள், நான்கு கத்திகள், ஒன்பது அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us