தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆவண எழுத்தர்கள் போராட்டம்

ஆவண எழுத்தர்கள் போராட்டம்

ஆவண எழுத்தர்கள் போராட்டம்


ADDED : நவ 10, 2026 06:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2026 06:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தனியார் பத்திரப்பதிவு மையங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுதும் ஆவண எழுத்தர்கள், நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், 589 இடங்களில், சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவற்றைச் சார்ந்து, 5,000க்கும் மேற்பட்ட ஆவண எழுத்தர்கள், உரிமம் பெற்று செயல்படுகின்றனர். பொது மக்கள் பத்திரப்பதிவு பணிகளை, சுமூகமாக முடிக்க, அவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில், 25 இடங்களில், தனியார் வாயிலாக, மாதிரி பதிவு மையங்கள் அமைக்க திட்டமிட்டு, பதிவுத்துறை ‘டெண்டர்’ கோரியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆவண எழுத்தர்கள், நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, ஆவண எழுத்தர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த, பதிவுத்துறை உயரதிகாரிகள் இன்று (நவ.,10) அழைப்பு விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us