''மாற்றத்திற்காகவே தேர்தலில் நிற்கிறேன்; தமிழக தேவைக்காக பேசுவேன்'': அண்ணாமலை
''மாற்றத்திற்காகவே தேர்தலில் நிற்கிறேன்; தமிழக தேவைக்காக பேசுவேன்'': அண்ணாமலை
ADDED : ஏப் 12, 2024 01:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: ''நான் வேட்பாளர்களை எதிர்த்து நிற்கவில்லை; மாற்றத்திற்காக தேர்தலில் நிற்கிறேன். நான் வெற்றிப்பெற்று தமிழகத்துக்கான தேவைகள் குறித்து பார்லிமென்டில் பேசுவேன்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவையில் இந்தியன் தொழில் முனைவோர் கூட்டத்தில் 'கோயம்புத்தூரின் தேவைகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: அடுத்த 25 ஆண்டுகளை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த பிரதமர் மோடி உறுதிப்பூண்டுள்ளார். நான் வேட்பாளர்களை எதிர்த்து நிற்கவில்லை; மாற்றத்திற்காக தேர்தலில் நிற்கிறேன். நான் வெற்றிப்பெற்று கோவை தொகுதி எம்.பி.,யாக மட்டும் பார்லிமென்ட் செல்லப்போவதில்லை. ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான தேவைகள் குறித்தும் பார்லிமென்டில் பேசுவேன். இவ்வாறு அவர் பேசினார்.

