தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சூரியசக்தி மின் நிலையத்துக்கு 35,000 விண்ணப்பம்

சூரியசக்தி மின் நிலையத்துக்கு 35,000 விண்ணப்பம்

சூரியசக்தி மின் நிலையத்துக்கு 35,000 விண்ணப்பம்

1


UPDATED : நவ 16, 2026 08:45 PM

ADDED : நவ 16, 2026 08:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 08:45 PM ADDED : நவ 16, 2026 08:42 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மானியம் வழங்கும் திட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 35,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நடவடிக்கையில் உள்ளன’ என, மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில், வீடுகளுக்கான மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஏப்., வரை, தமிழகத்தில், 87,000 வீடுகளில் மட்டுமே, மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் இருந்து வந்த நிலையில், முதல்வர் விஜய், அத்திட்டத்தை ஊக்குவிக்க, கூடுதல் மானியத்தை அறிவித்தார்.

இத்திட்டத்தில், மக்கள் எளிதாக பயன்பெற, எளிதாக விண்ணப்பிக்க, மின் வாரியத்தில் ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 35,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நடவடிக்கையில் உள்ளன. வரும், 2027 மார்ச்சுக்குள், ஒரு லட்சம் வீடுகளில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us