ADDED : மார் 15, 2024 11:42 PM
சென்னை:ஒரே நாளில், 40 கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கூரியர் நிறுவனத்தை சாதகமாக பயன்படுத்தி, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை பல்லாவரத்தில் உள்ள எஸ்.டி., கூரியர் தலைமை அலுவலகம் உட்பட, 10க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி, அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
சென்னையில் சந்தேகப்படும்படி, சோதனை நடத்தப்பட்ட நிறுவனங்களில் இருந்து, ஒரே நாளில், 40 கோடி ரூபாய் கைமாறி உள்ளது. இந்த பணம் சட்ட விரோதமாக பரிமாறப்பட்டு உள்ளது. பணம் யாருக்கு சென்றது, எதற்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
எஸ்.டி., கூரியர் தலைமை அலுவலகம் உட்பட சில நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக, ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

