சேத்தியாத்தோப்பு அணையில் 47,500 கனஅடி நீர் வெளியேற்றம்
சேத்தியாத்தோப்பு அணையில் 47,500 கனஅடி நீர் வெளியேற்றம்
ADDED : டிச 14, 2024 04:00 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 47,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. தொழுதுார் மற்றும் பெலாந்துறை அணைக்கட்டுகளில் இருந்து 21 ஆயிரம் கன அடி தண்ணீர் வெள்ளாற்றிலும், 15 ஆயிரம் கன அடி தண்ணீர் மணிமுத்தாற்றிலும் திறந்து விடப்பட்டு, சேத்தியாதோப்பு அணைகட்டை வந்தடைந்தது.
நேற்று காலை 6.00 மணியளவில் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின், படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
மாலை 6:00 மணி நிலவரப்படி 47,500 கன அடி தண்ணீர் திறந்து வெளியேற்றப்பட்டது.
சேத்தியாத்தோப்பு பகுதியில் நேற்று மழை வெள்ள பாதிப்பை பார்வையிட வந்த கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, குமார உடைப்பு வாய்க்கால், 25 கண் மதகு, வீராணம் ஏரி பூதங்குடி வி.என்.எஸ்., மதகு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

