ADDED : நவ 28, 2024 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: நெய்வேலி ஜெயராம் நகரைச் சேர்ந்தவர் நுார்முகமது மனைவி யாஷிகாபானு, 25. இவர் தனது தாய்வீடான திண்டுக்கல் சென்று திரும்பும்போது, 5 சவரன் நகை இருந்த கைப்பையை பஸ்சில் தவற விட்டார். வடலுார் பஸ் டெப்போவில் சென்று விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளிக்க சென்றபோது, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ராமதாஸ் மனைவி கவுசல்யா என்பவர், பஸ்சில் நகையுடன் கிடந்த கைப்பையை எடுத்து குறிஞ்சிப்பாடி போலீசில் ஒப்படைத்திருந்தது தெரிந்தது.
குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் ராஜதாமரைப்பாண்டியன் விசாரித்து, அந்த நகை யாஷிகா பானுவினுடையது என்பதை உறுதி செய்தார். பின் நகையை கண்டுபிடித்து ஒப்படைத்த கவுசல்யாவை வரவழைத்து, அவரது முன்னிலையில் நகையை யாஷிகா பானுவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.