55 கிலோ கஞ்சா பறிமுதல்: மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை
55 கிலோ கஞ்சா பறிமுதல்: மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை
ADDED : ஏப் 08, 2025 09:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5.50 லட்சம் மதிப்புள்ள 55 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தென் கடற்கரை அய்யனார் கோவில் அருகே கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக 27 பொட்டலங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த சொகுசு காரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.5.50 லட்சம். சொகுசு காரின் பதிவு எண்ணை கொண்டு கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.