தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘டாஸ்மாக்’ கடைகளில் 60 சதவீத காலி பாட்டில் தான் திரும்ப வருகிறது

‘டாஸ்மாக்’ கடைகளில் 60 சதவீத காலி பாட்டில் தான் திரும்ப வருகிறது

‘டாஸ்மாக்’ கடைகளில் 60 சதவீத காலி பாட்டில் தான் திரும்ப வருகிறது


UPDATED : நவ 19, 2026 07:04 PM

ADDED : நவ 19, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 07:04 PM ADDED : நவ 19, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘டாஸ்மாக்’ கடைகளில் காலி பாட்டில் திரும்ப வாங்கும் பணியில், ‘டிஜிட்டல்’ முறையை அமல்படுத்தியும், 60 சதவீத பாட்டில்கள் மட்டுமே திரும்ப வருகின்றன.

நீதிமன்ற உத்தரவின்படி, காலி பாட்டில்கள் மது கடைகள் வாயிலாக திரும்ப பெறப்பட்டு வருகின்றன. இதற்காக, மது பாட்டிலின் விலையுடன், கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது. காலி பாட்டிலை திரும்ப கொடுத்ததும், 10 ரூபாயை கடை ஊழியர்கள் வழங்க வேண்டும். பணத்தை வழங்காமல் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, மது பாட்டிலின் எம்.ஆர்.பி., விலையுடன் கூடுதலாக, 10 ரூபாய் சேர்க்கப்பட்டது. அந்த விலைக்கு மது பாட்டிலை வாங்கிய பின், காலி பாட்டிலை திருப்பி தந்தால், 10 ரூபாய் தரப்படும்.

இந்த முறை அமல்படுத்தியும், 60 சதவீத காலி பாட்டில்கள் மட்டுமே கடைகளுக்கு திரும்ப வருகின்றன. இதனால், அதற்காக கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம், ‘குடி’மகன்களுக்கு கிடைப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வசூலிக்கப்பட்ட, 10 ரூபாயை, பாட்டிலை திரும்ப வழங்கியதும், கடை ஊழியர்கள் தர உத்தரவிடப்பட்டு உள்ளது. அதை தராத ஊழியர்கள் தொடர்பாக புகார் வந்தால். உடனுக்குடன் தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன’ என்றார்.

ஒரு நாளைக்கு

எவ்வளவு பாட்டில்?

டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளைக்கு சராசரியாக, 1.70 லட்சம் பெட்டி மது வகைகளும், 1 லட்சம் பெட்டி பீர் வகைகளும் விற்பனையாகின்றன. மது பெட்டியில் சராசரியாக 180 மி.லி., உடைய ‘குவார்ட்டர்’ 48 பாட்டில்களும், பீர் பெட்டியில், 12 பாட்டில்களும் உள்ளன. ஒரு நாளைக்கு, 81.60 லட்சம் பாட்டில்களும், 12 லட்சம் பீர் பாட்டில்களும் விற்பனையாகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us