ADDED : ஆக 02, 2025 07:41 PM
சென்னை:தமிழகத்தில், இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபட்ட, 6,272 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, சிவில் சப்ளை சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், தமிழக அரசு பொது வினியோக திட்டத்தின் வாயிலாக, அரிசி உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை, வினியோகம் செய்து வருகிறது. இப்பொருட்களை சிலர் முறைகேடாக விற்பனை செய்வதுடன், கடத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அந்த வகையில், இந்த ஆண்டில் ஜூலை, 31 வரையிலான, ஏழு மாதங்களில், ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக, 6,272 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.