ADDED : ஜூலை 31, 2025 01:00 AM
சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்த கவுன்சிலிங்கில், 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், அவர்களின் பெற்றோர் பங்கேற்றனர். அவர்களுக்கு, மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில், உணவு போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. இடங்கள் பெற்றவர்களுக்கு, அமைச்சர் சுப்பிரமணியன், ஒதுக்கீட்டு ஆணை வழங்கினார்.
பின், அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
மருத்துவ கவுன்சிலிங்கில், 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில், 494 எம்.பி.பி.எஸ்., 119 பி.டி.எஸ்.,; சிறப்பு பிரிவில் 86 இடங்கள் உட்பட, 699 இடங்கள் நிரம்பின. நான்கு முறைக்கு மேல், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் இடம் பெறுவதால் தான், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி வருகிறோம். நீட் தேர்வை, அ.தி.மு.க., ஆட்சியில் அனுமதித்ததன் விளைவாக இதுபோன்று நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

