ADDED : அக் 16, 2025 11:33 PM
வடகிழக்கு பருவமழை வெள்ள கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிக்கு, ஏழு தலைமை பொறியாளர்களை, நெடுஞ்சாலை துறை நியமித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை காலத்தில், சாலைகள் மற்றும் பாலங்களை கண்காணித்து, வெள்ள சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, நெடுஞ்சாலைத் துறையில் இருந்து கண்காணிப்பு அலுவலர்களை அரசு நியமித்துள்ளது.
அதன்படி, சென்னைக்கு தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், விழுப்புரம் - பன்னீர்செல்வம், தஞ்சாவூர் மற்றும் திருச்சி - கிருஷ்ணசாமி, மதுரை - சரவணன், திருநெல்வேலி - ஜவஹர் முத்துராஜ், திருவண்ணாமலை மற்றும் சேலம் - தேவராஜ், திருப்பூர் மற்றும் கோவை - செந்தில் ஆகிய, ஏழு தலைமை பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
பருவமழை முடியும்வரை, இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் என, நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்.