ADDED : ஏப் 29, 2025 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சட்டசபையில் நேற்று ஒரே நாளில், எட்டு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சட்டசபையில் நேற்று, உள்துறை, தீயணைப்பு துறை மீதான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
அதற்கு முன், கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு, தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்ட மசோதா, நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திருத்த மசோதா, ஜி.எஸ்.டி., சட்டத்  திருத்த மசோதா, பதிவு சட்ட திருத்த மசோதா, கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட திருத்த மசோதா போன்றவை தாக்கல் செய்யப்பட்டன.
அத்துடன், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலை அமைக்கும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சட்ட மசோதாவை, அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

