sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈரோடு த.வெ.க., கூட்டத்துக்கு போலீசார் விதித்த 84 நிபந்தனை

/

ஈரோடு த.வெ.க., கூட்டத்துக்கு போலீசார் விதித்த 84 நிபந்தனை

ஈரோடு த.வெ.க., கூட்டத்துக்கு போலீசார் விதித்த 84 நிபந்தனை

ஈரோடு த.வெ.க., கூட்டத்துக்கு போலீசார் விதித்த 84 நிபந்தனை

7


ADDED : டிச 15, 2025 10:36 PM

Google News

7

ADDED : டிச 15, 2025 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சரளையில் வரும், 18ம் தேதி நடக்கும், த.வெ.க., பிரசார கூட்டத்துக்கு, ஈரோடு மாவட்ட போலீசார், 84 நிபந்தனைகள் விதித்துள்ளனர். இதுகுறித்த பட்டியல் பெருந்துறை பகுதி கட்சி பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

போலீசார் விதித்துள்ள நிபந்தனைகள்:* பிரசார வேனை சுற்றி நான்கு புறமும் மக்களுக்கும், வேனுக்கும் இடையே, 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.

* மக்கள் உள்ளே, வெளியே வந்து செல்வது குறித்த வரைபடம்

* பொதுமக்கள் வந்து செல்லும் போது தள்ளுமுள்ளு இல்லாத வகையில் கூட்டத்தை கட்டுப்படுத்த தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

* மனுவில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்கள் வர அனுமதிக்க கூடாது

* மருத்துவ குழு மற்றும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய வேண்டும். எத்தனை மருத்துவ குழு, எத்தனை ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும் என்ற விபரத்தை அளிக்க வேண்டும்.

* 'சிசிடிவி' கேமரா, எல்.இ.டி. திரைகளின் எண்ணிக்கை விபரம் வழங்க வேண்டும்.

* அவசர காலத்தில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் தனி வழி விட வேண்டும்.

* மின் கம்பங்கள், மரங்கள், உயரமான கட்டடங்கள், விளம்பர போர்டுகள் மீது தொண்டர்கள் ஏறி நிற்காமல் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட, 84 நிபந்தனைகளை போலீஸ் தரப்பில் விதிக்கப்பட்டுள்ளதாக, பெருந்துறை பகுதி த.வெ.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us