ADDED : அக் 19, 2024 09:02 PM
சென்னை:தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனங்களில் முக்கிய பதவிகளாக கருதப்படும் ஒன்பது இயக்குனர் பதவிகளுக்கு, அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது.
அதில், தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் களாக இருந்தவர்கள் நிதி பிரிவுகளுக்கும்; தலைமை பொறியாளர்களாக இருந்தவர்கள் மற்ற பிரிவுகளுக்கும் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விபரம்:
பெயர் - இயக்குனர் பதவி
லட்சுமி - மின் இயக்கம்
சந்திரசேகரன் - மின் தொடரமைப்பு திட்டங்கள்
வினோதன் - தொழில்நுட்பம், பசுமை எரிசக்தி கழகம்
செந்தில்குமார் - தொழில்நுட்பம், மின் உற்பத்தி கழகம்
கருக்குவேல்ராஜன் - மின் திட்டங்கள்
மாஸ்கர்னஸ் - இயக்குனர், மின் பகிர்மானம்
ராஜேஸ்வரி - நிதி, பசுமை எரிசக்தி கழகம்
பாலகிருஷ்ணன் - நிதி, மின் உற்பத்தி கழகம்
* இந்திராணி - மேலாண் இயக்குனர், மின் தொடரமைப்பு கழகம்