உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
சென்னை: வீட்டை விட்டு வெளியேறிய இருவர் உட்பட எட்டு சிறுமியர் மற்றும் ஒரு சிறுவனை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மீட்டுள்ளனர்.
கடந்த 16 - 22ம் தேதி வரை, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார், மாநிலம் முழுதும் விசாரணையில் ஈடுபட்டு, திருச்சி மாவட்டம், சமயபுரம் கோவிலில் பெற்றோரை தவறவிட்ட, 12 வயது சிறுவனை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல, நாகப்பட்டினம் மாவட்டத்தில், வீட்டை விட்டு வெளியேறி, பாலியல் அத்துமீறலுக்கு ஆளான இருவர் உட்பட எட்டு சிறுமியரையும் மீட்டனர். ஈரோடு ரயில் நிலையம் அருகே, ஆதரவற்ற நிலையில் இருந்த பெண்ணையும் மீட்டுள்ளனர் என, காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
