உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
சென்னை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, 'இண்டிகோ' நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்நிறுவன அறிக்கை:
சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கான, 'இண்டிகோ' விமானங்கள், வரும் அக்., 31 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜெட்டா, தமாம் மற்றும் மதீனா ஆகிய நகரங்களுக்கான விமானங்கள், வரும், 27 வரை ரத்து செய்யப்படுகின்றன.
பயணத்தின்போது வழங்கப்பட்ட தொடர்பு எண்கள் வாயிலாக, பயணியருக்கு தகவல்கள் நேரடியாக அனுப்பப்பட்டு வருவதால், பயணத்திற்கு முன், 'இண்டிகோ' இணையதளத்தில், விமானத்தின் தற்போதைய நிலையை சரிபார்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.
