உள்ளடக்கத்திற்கு செல்ல
சிறை பாதுகாப்பு அம்சங்கள் அறிக்கை தர டி.ஜி.பி., உத்தரவு
சிறை பாதுகாப்பு அம்சங்கள் அறிக்கை தர டி.ஜி.பி., உத்தரவு
UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
சென்னை: 'புழல் சிறை கைதிகள் இருவர் தப்பித்து, மீண்டும் பிடிபட்ட நிலையில், தமிழகத்தில் உள்ள, எல்லா சிறைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, விசாரணை கைதிகளான, சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ், 41; நேபாளத்தை சேர்ந்த சுதீப் போகாத்தீ, 23, ஆகியோர் தப்பித்து, மீண்டும் பிடிபட்டுள்ளனர்.
இந்நிலையில், 'மாநிலத்தில் உள்ள, 125 சிறைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சிறை கண்காணிப்பாளர்களுக்கு, சிறைத்துறை டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோட் உத்தரவிட்டுள்ளார்.
