உள்ளடக்கத்திற்கு செல்ல
அணை, கதவணை நிலையங்களில் 94 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
அணை, கதவணை நிலையங்களில் 94 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
UPDATED : நவ 16, 2026 10:27 PM
ADDED : நவ 16, 2026 10:24 PM
அ நிறம் | அளவு
மேட்டூர்: மேட்டூர் அணை, சுரங்க மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக, 250 மெகாவாட்; காவிரி குறுக்கே கட்டியுள்ள, 7 கதவணை நிலையங்களில் தலா, 30 வீதம், 210 என, 460 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். அதற்கு மேட்டூர் அணையில் அதிகபட்சம், 23 ஆயிரத்து 500 கனஅடி நீர் பாசனத்துக்கு திறக்க வேண்டும்.
ஆனால் கடந்த மாதம், 23 முதல், மேட்டூர் அணை டெல்டா நீர்திறப்பு வினாடிக்கு, 3,000 கனஅடியில் இருந்து, 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் அணை மின் நிலையத்தில், 10 மெகாவாட், கதவணை மின் நிலையங்களில் தலா, 12 வீதம், 84 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன்படி, 25 நாட்களாக அணை, கதவணை நிலையங்களில், 94 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
