உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 16, 2026 10:27 PM
அ நிறம் | அளவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், போளூர் சாலையில், வீடு கட்டும் பணியில், கிளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஜெயராமன், 45, என்பவர் இன்று (நவ.,16) ஈடுபட்டார்.
செங்கற்களை கீழே இருந்து, 4வது மாடிக்கு துாக்கி சென்றபோது, 4வது மாடியிலிருந்து தவறி விழுந்ததில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
