20 ஆண்டுக்கு பி।ன் கிடைத்தது 98 தொழிலாளருக்கு சம்பளம் 20 ஆண்டு நடந்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு
20 ஆண்டுக்கு பி।ன் கிடைத்தது 98 தொழிலாளருக்கு சம்பளம் 20 ஆண்டு நடந்த வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு
ADDED : மார் 08, 2024 02:05 AM
திருப்பூர்:ஐகோர்ட் உத்தரவால், 98 தொழிலாளர்கள், 20 ஆண்டுகளுக்குப் பின், தங்களுக்கான சம்பளத் தொகையை பெற உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் செயல்பட்டு வந்த வெங்கடேஸ்வரா ஸ்பின்னிங் மில்ஸ், கடந்த 2003ல் மூடப்பட்டது. பணியில் இருந்த, 536 நிரந்தர தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. நிர்வாகம் நடத்திய பேச்சு வாயிலாக, 438 தொழிலாளர்களுக்கு 'செட்டில்மென்ட்' வழங்கப்பட்டது. மீதமுள்ள, 98 தொழிலாளர்கள், தொழிலாளர் தீர்ப்பாயத்தில் முறையிட்டனர்; மில் நிர்வாகம் தரப்பிலும் முறையிடப்பட்டது.
கடந்த, 2008ல், தொழிலாளர் நிலுவைத் தொகையை வழங்க, தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது; ஆனால், மில் நிர்வாகம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. தொடர்ந்து, 20 ஆண்டுகளாக நடந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் நீதிபதி மாலா வழங்கியுள்ள தீர்ப்பில், 'மில் மூடப்பட்ட ஆறு மாதம், 10 நாட்களுக்கான சம்பளத்தை, 98 தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

