UPDATED : நவ 05, 2026 12:00 AM
ADDED : நவ 04, 2026 09:18 PM
* தமிழகம் உட்பட நாடு முழுதும், 2024ல் நடந்த ‘நீட்’ தேர்வுக்கான ‘ஆன்லைன்’ விண்ணப்பத்தில், தவறுதலாக பொதுப் பிரிவினர் என குறிப்பிட்டதாகவும், அதை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என, மாற்றம் செய்யக் கோரி, மதிதர்ஷினி உள்ளிட்ட ஆறு மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
* மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுத்து, தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்களை விற்க அனுமதித்ததாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என, மொத்தம் 26 பேருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, எம்.பி., – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றம், ‘குட்கா முறைகேடு வழக்கில், சாட்சி விசாரணை எப்போது தொடங்கப்படும்’ என, சி.பி.ஐ., தரப்புக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
