தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சில வரி செய்தி: அக். 29

சில வரி செய்தி: அக். 29

சில வரி செய்தி: அக். 29


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 08:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி: பெருமாள்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 57, என்பவரை சொத்து தகராறில், 2024 மார்ச், 11ல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்த அவரது தம்பி சந்திரசேகர், 50, என்பவருக்கு, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளித்தது.

விருதுநகர்: மம்சாபுரத்தில் ஜெயக்குமார், 57, என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று மதியம், 12:30 மணியளவில் தொழிலாளர்கள் டீ குடிக்க சென்ற போது, வெடிமருத்து கலவை வேதியியல் மாற்றத்தால் ஏற்பட்ட வெடி விபத்தில், மூலப்பொருட்கள் கருகின; மூன்று அறைகள் சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி: காடிபாளையத்தை சேர்ந்த பழைய வாகன வியாபாரி பிரவீன்குமார், 37, நேற்று முன்தினம் அந்திவாடியில் தலையில் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது தந்தை திவாகர் ராவ், 65, மத்திகிரி போலீசில் அளித்த புகாரில், மர்ம மரணம் என வழக்கு பதிந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார்: வேடப்பர் கோவில் அருகே, நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்ட விருத்தாசலம் போலீசார், ஒரே பைக்கில் வந்த, ஆதித்யா, 19, தொல்காப்பியன், 20, ஹரிபிரசாத், 23, ஆகிய மூவரிடம் சோதனை செய்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பு போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி: ஓசூர் ஆனந்த் நகரில் டிபன் கடை நடத்தும் கோவிந்தன், 45, என்பவர் அக்., 9ம் தேதி, 16 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தார். இளம்பெண்ணின் தாய் நேற்று முன்தினம் அளித்த புகாரில், ஓசூர் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கோவிந்தனை நேற்று கைது செய்தனர்.

சிவகங்கை: மானகிரியை சேர்ந்தவர் பாண்டிக்கண்ணன், 44. இவரது மனைவி வித்யா, 26, கடந்த 2013ல் தற்கொலை செய்துகொண்டார். வழக்கு விசாரித்த சிவகங்கை மகிளா விரைவு நீதிமன்றம், பாண்டிக்கண்ணன், அவரது தாய்க்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், 6,000 ரூபாய் அபராதமும் நேற்று விதித்தது.

கிருஷ்ணகிரி: மாதரசனப்பள்ளியை சேர்ந்த சதீஷ், 38, – பவித்ரா, 30, தம்பதிக்கு, 8 மற்றும் 5 வயதில், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அக்., 12ல் குறைபிரசவத்தில் பிறந்து, அக்., 15ல் இறந்த பெண் குழந்தையை வீட்டருகே புதைத்தனர். புகாரில், நேற்று காலை குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us