ADDED : அக் 04, 2024 12:11 AM
துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவை ஒட்டி, வரும் 16ம் தேதி வரை, சென்னை, கோவை, திருச்செந்துார் உள்ளிட்ட நகரங்களில் இருந்து குலசைக்கு தினமும் இயக்கப்படும் பஸ்களோடு, 100க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. திருவிழா முடிந்து திரும்புவதற்கு ஏதுவாகவும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர்களாக, 14 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி முதல்வராக லியோ டேவிட், செங்கல்பட்டு - சிவசங்கர், கள்ளக்குறிச்சி - பவானி, ஈரோடு - ரவிகுமார், கன்னியாகுமரி - ராமலட்சுமி, திருச்சி - குமரவேல், மதுரை - அருள் சுந்தரேஷ்குமார், ராமநாதபுரம் - அமுதா ராணி, சேலம் - தேவி மீனாள், புதுக்கோட்டை - கலைவாணி, தேனி - முத்துசித்ரா, கரூர் - லோகநாயகி, விருதுநகர் - ஜெயசிங், வேலுார் - ரோகிணிதேவி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு அனுமதி பெற்றுள்ள மருத்துவக் கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும், தங்களது சுய விபரங்கள் அடங்கிய உறுதியளிப்பு சான்றை, தேசிய மருத்துவ ஆணையத்தின் பக்கத்தில் பதிவேற்றுவது அவசியம். ஆண்டுதோறும் மருத்துவக் கல்லுாரிகளுக்கான அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு, இது கட்டாயமாகும். வரும் 31க்குள் உறுதியளிப்பு சான்றை, அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் சமர்ப்பிக்க, முதுநிலை மருத்துவக் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.

