நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தமிழை ஆர்வமாக படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்த, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ் திறனறி தேர்வு நடத்தப்பட்டு, அதிக மதிப்பெண் பெறும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களில், தலா 750 பேர் என மொத்தம், 1,500 பேருக்கு, மாதம் 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான தேர்வு அக்., 19ம் தேதி நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற 1,500 மாணவர்களின் பட்டியலை, அரசு தேர்வுகள் துறை www.tge.tn.gov.in/ta.results.html என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

