வெறுத்துப் போச்சு சார்...! பேட்டரி பைக்கை தீ வைத்து கொளுத்திய நபரால் பரபரப்பு
வெறுத்துப் போச்சு சார்...! பேட்டரி பைக்கை தீ வைத்து கொளுத்திய நபரால் பரபரப்பு
ADDED : நவ 29, 2024 07:08 AM

சென்னை: சென்னையில் ஷோரூம் முன் பேட்டரி பைக்கை தீவைத்து கொளுத்திய நபரால் பரபரப்பு நிலவியது.
திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் அம்பத்தூரில் உள்ள பேட்டரி பைக் ஷோ ரூமில் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான பைக்கை வாங்கியுள்ளார். பைக் வாங்கியது முதல் தற்போது வரை தொடர்ந்து பிரச்னை இருந்து வருவதாகவும், இது தொடர்பாக ஷோ ரூமில் புகார் கொடுத்தால், அலட்சியமாக பதில் அளித்து, பிரச்னைக்கு தீர்வு காணாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஒருகட்டத்தில் அதிருப்தியடைந்த பார்த்தசாரதி, ஷோ ரூம் முன்பு தனது பைக்கை தீவைத்து கொளுத்தியுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கு குவிந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அவரிடம் ஷோ ரூம் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'இவ்வளவு நாள் புகார் சொல்லியும், பிரச்னைக்கு தீர்வு காணாமல், அலட்சியமாக பதில் சொல்லுகிறார்கள். உங்களின் சிஸ்டமே தப்பு. வெறுத்துப் போச்சு சார். எனக்கு பிரச்னைக்கு தீர்வே வேண்டாம்,' என்று ரொம்பவும் நொந்து போய் பேசினார்.
இதையடுத்து, தகவல் அறிந்து வந்த போலீசார் பார்த்தசாரதியை சமாதானப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தனர்.

